மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

ரூ.13 கோடியில் பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு!

ரூ.13 கோடியில் பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு!

சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியில் பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் சம்பத் தெரிவித்தார். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம், பண்ணப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பண்ணப்பட்டி பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் சம்பத் ஆய்வு செய்தார். அப்போது, வேலை செய்யும் தொழிலாளர்களின் விவரம் குறித்தும், வாய்க்கால் தூர்வாரும் பணிகளின் தன்மை குறித்தும் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், வேலை செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறதா? இத்திட்டத்தின் மூலம் அவரவர் வங்கிக் கணக்குகளில் ஊதியம் செலுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் சம்பத், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சம்பத் கூறியதாவது: “சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின் நோக்கமானது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நீர்பாசன வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவையாகும். இதன் மூலம் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கிட உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் அவரவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2016–17ஆம் ஆண்டில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 14 குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இதில் 2,372 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் தற்பொழுது, பொதுப்பணித்துறையினருடன் இணைந்து வாய்க்கால் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 2016–17ஆம் நிதியாண்டில் சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 94 வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் 250 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கென ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனாளிகளை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது”. இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon