மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 1 டிச 2020

ஆற்றல் மேலாண்மைக்கு ரூ.750 கோடி முதலீடு!

ஆற்றல் மேலாண்மைக்கு ரூ.750 கோடி முதலீடு!

ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்ச்நெய்டர் நிறுவனம் இந்தியாவில் ஆற்றல் மேலாண்மை மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.750 கோடி முதலீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஸ்ச்நெய்டர் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் 28 தொழிற்சாலைகளை நிறுவி ஆற்றல் மேலாண்மை மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தனது ஆராய்ச்சி, மேம்பாடு, கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க சுமார் ரூ.750 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ச்நெய்டர் எலெக்ட்ரிக் நிறுவன சி.இ.ஒ. ஜீன் ட்ரிகோய்ர் கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்துள்ளோம். கடந்த 10 வருடங்களில் மட்டும் 800 மில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக 100 மில்லியன் யூரோ முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் தொடரும் எங்களது பணியை துரிதப்படுத்தவே இந்த ரூ.750 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 20,000 பேர் எங்களது கிளைகளில் பணிபுரிகிறார்கள். இன்னும் நிறைய பேருக்கு பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் டிஜிட்டல்மயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, அதை நாங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon