மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

வேலை வாய்ப்பு: மத்திய அரசில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு வேலை!

வேலை வாய்ப்பு: மத்திய அரசில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு வேலை!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 2016ஆம் ஆண்டுக்கான 5,132 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளார்க் (கிரேடு-சி) பணியிடங்களுக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கு பிளஸ்-2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: போஸ்டல் அசிஸ்டெண்ட் / சார்டிங் அசிஸ்டெண்ட் – 3,281

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பதவி: டெட்டா எண்ட்ரி ஆபரேட்டர் – 1,321

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பதவி: லோயர் டிவிஷன் கிளர்க் - 506

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பதவி: கோர்ட் கிளர்க் - 26

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயது வரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வி (பிளஸ்-2) அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணிகளுக்கு ஹிந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள், விதைவகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை கணினிப்பிரதி எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2016.

தேர்வு நடைபெறும் தேதி: 07.01.2017, 05.02.2017 மற்றும் 09.04.2017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSCWEBSITELATEST/notice/noticepdf/CHSLE2016Noticeenglish.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon