மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

மொபைல் ஆப்ஸ் மூலம் சுவையான உணவு – ரயில்வே அறிவிப்பு!

மொபைல் ஆப்ஸ் மூலம் சுவையான உணவு – ரயில்வே அறிவிப்பு!

ரயிலில் பயணிப்பவர்களுக்கு சுவையான உணவுகள் வழங்க மத்திய அரசு பலவகைகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயணிகள் ஆர்டர் செய்த சில நிமிடங்களிலே பயணிகள் இருக்கும் இடத்துக்கு சூடாகவும், சுவையாகவும் உணவை வழங்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. பலவிதமான விரைவு உணவு மெனுக்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில் பயணிகளின் வசதிக்காக பாஸ்ட் புட் வகைகளையும் ரயிலில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் ஆப்ஸ் மூலம் ஆர்டர் செய்தால், ஆர்டர் செய்த இரண்டு நிமிடத்தில் பயணிகளின் இருக்கைக்கே உணவு கொண்டு வந்து தரப்படுகிறது.

பயணிகள் தங்களின் இருக்கை எண்ணை குறிப்பிட்டு, தங்களுக்கு தேவையான உணவை ஆப்ஸ் மூலம் ஆர்டர் செய்யலாம். சர்வதேச உணவுகளும் குறைந்த விலையில், சுவையாக, தரமானதாக தர முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட வசதிகளை பயணிகள் விரைவாக பெற வேண்டும் என்பதற்காக, ரயில்வே நிர்வாகம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதியை வழங்கும் சேவையை தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் இந்த இலவச வைஃபை வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்வதை ஊக்கப்படுத்துவதற்காக இந்த சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய வழித்தடங்களைக் கொண்ட ரயில் நிலையங்கள் அருகில் இருந்து உணவைக் கொண்டு வர, ரயில்வே நிர்வாகம் தனியார் உணவு விடுதிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக முக்கிய ரயில் நிலையங்களிலேயே அனைத்து நிறுவனங்களும் தங்களின் உணவுகளை சூடாக உணவுகளை, ரயில்களுக்கு விநியோகம் செய்வதற்கு ‘பேஸ் கிச்சன்ஸ்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon