மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ரூ.20,000-க்கு மகள்களை விற்ற தந்தை!

ரூ.20,000-க்கு மகள்களை விற்ற தந்தை!

மத்தியப்பிரதேச மாநிலத்தில், வறுமை காரணமாக பெற்ற தந்தையே தன் இரண்டு மகள்களை ரூ.20,000-க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், தாட்டியா அருகே உள்ள பிகார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் அஹிர்வார். இவர் தினக்கூலியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு நிலையான வேலை இல்லாததால், கிடைக்கும் வேலையைச் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது மனைவி இறந்துவிட்டார். அதன் பிறகு உள்ளூரில் ஒரு குழுவுடன் இணைந்து வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், மூன்று குழந்தைகளையும் பராமரிக்க முடியாமல் ரமேஷ் அஹிர்வார் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால், அக்குழுவுடன் சேர்ந்து தனது ஆறு வயது மகள் மற்றும் 13 வயது மகள் இருவரையும் அங்குள்ள இரு வேறு குழுக்களிடம் ரூ.20,000-க்கு விற்றுள்ளார். தன்னுடைய மகனை வேலைபார்க்கும் இடத்திலேயே விட்டுவிட்டு திடீரென ரமேஷ் அஹிர்வார் தலைமறைவாகி விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் தலைமறைவான ரமேஷ் அஹிர்வாரைத் தேடி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம், ஐதராபாத்தில் மல்லேஷ் என்பவர் தனது ஆறு வயது மற்றும் நான்கு மாதப் பெண் குழந்தையை வறுமைக்காரணமாக ரூ.20,000-க்கு விற்க முயன்றதை தொடர்ந்து போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon