மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

ஊனத்தைக் காரணம் காட்டி பணியிலிருந்து நீக்கக்கூடாது – மத்திய அரசு!

ஊனத்தைக் காரணம் காட்டி பணியிலிருந்து நீக்கக்கூடாது – மத்திய அரசு!

அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு உடலில் ஊனம் ஏற்பட்டால், அவர்கள் அதுவரை பார்த்து வந்த பணியிலிருந்து பதவி இறக்கம் செய்யப்படுகிறார்கள். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அண்மையில் சென்னையில் செயல்படும் மத்திய அரசின் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்த்த விஞ்ஞானி ஞானபாரதி என்பவருக்கு விபத்தில் ஊனம் ஏற்பட்ட காரணத்தால் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார். பின்பு, பலமுறை அலுவலக வளாகத்திலேயே மாற்றுத்திறானாளிகள் கூட்டமைப்போடு இணைந்து போராட்டம் நடத்தியதால் அவருக்கு மீண்டும் அவர் பார்த்த விஞ்ஞானி பணியே கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சமீபத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதில், ‘உடலில் ஊனம் ஏற்பட்ட ஊழியரை பணியிலிருந்து நீக்கவோ அல்லது அவர் வகித்து வந்த பதவியிலிருந்து கீழ் நிலை பதவிக்கு இறக்குவதோ கூடாது. மேலும், அரசு ஊழியர் தான் வகிக்கும் பணிக்கு நிரந்தரமாக தகுதியற்றவராக இருந்தால், அதாவது அவர் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்பட்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றால், அவருக்கு ஓய்வூதியமோ அல்லது பணிக் கொடையோ வழங்க வேண்டும். ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து மருத்துவச் சான்றிதழைப் பெற்று சமர்ப்பித்தல் வேண்டும். உடல் உபாதைகளைக் காரணம் காட்டி எந்த ஒருவருக்கும் பதவி உயர்வு மறுக்கப்படக்கூடாது’ என்பன உள்ளிட்ட திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon