மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

யமஹா: விவசாயத்துக்கு உதவும் விமானம் அறிமுகம்!

யமஹா: விவசாயத்துக்கு உதவும் விமானம் அறிமுகம்!

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான யமஹா, விவசாயத்துக்கு உதவும் வகையில் சிறிய ரக விமானங்களை அறிமுகம் செய்துள்ளது.

யமஹா ‘பேஸர் ஆர்’ மற்றும் ‘பேஸர் ஆர் ஜி2’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய ரக விமானங்கள், விவசாய நிலத்தை கண்காணிக்கவும், புகைப்படங்களை எடுக்கவும் மற்றும் நிலங்களைக் காக்கும் வேதிப் பொருட்கள் மற்றும் உரங்களைத் தூவவும் பயன்படும் வகையில் இந்த விமானங்களை யமஹா வடிவமைத்துள்ளது. மேலும், இந்த இரு விமானங்களையும் கையில் இருக்கும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவே இயக்க முடியும்.

இதில், யமஹா பேஸர் ஆர் விமானம் 32 லிட்டர் வேதிப்பொருள் (உரம்) நிரப்பக்கூடிய டேங்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு ஏக்கர் நிலத்தில் வேதிப் பொருட்களை தூவ முடியும். அதேபோல மற்றொரு விமான ரகமான பேசர் ஆர் ஜி2 பொருட்களை எடுத்துச்செல்வது, நிலங்களைப் பாதுகாப்பது போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது. இதில் வேதி பொருட்களை தூவும் வசதி கிடையாது. இந்த இரு விமானங்களும் 35 கிலோ எடைகொண்ட பொருட்களை 90 கி.மீ தொலைவுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், 2,800 மீட்டர் மேலே செல்லும் திறனுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு சிறிய ரக விமானங்களும் வருகிற 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று யமஹா அறிவித்துள்ளது. இந்த விமானங்களின் விலையைப் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத யமஹா, இந்த விமானங்கள் இந்திய மதிப்பின்படி ரூ.8 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த விமானங்கள் விவசாயப் பணிகளை எளிதாக்கும் என்பதால் இவை அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon