மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

தங்கம் இறக்குமதி 59% சரிவு!

தங்கம் இறக்குமதி 59% சரிவு!

ஜனவரி - செப்டம்பர் இடையேயான ஒன்பது மாத காலகட்டத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 58.96 சதவிகிதம் சரிந்து 270 டன்களாக உள்ளது என்று அசோசம் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கம் மீதான இறக்குமதி வரியை தற்போதுள்ள 10 சதவிகிதத்திலிருந்து குறைக்க பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், தங்க நகைக்கடை உரிமையாளர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தினர். இதனால் தங்கம் இறக்குமதி இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே சரிந்து காணப்பட்டது.

தங்கத்தின்மீதான கலால் வரி அதிகமாக இருப்பதால் தங்கம் கொள்ளை அதிகரித்தது. உலகளவில் மிகப்பெரிய தங்கம் நுகர்வோர் நாடாக இந்தியா உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 1,000 டன்கள் அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ஆனால், கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையில் 658 டன்கள் தங்கம் இறக்குமதி செய்திருந்த இந்தியா, இந்தாண்டின் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் வெறும் 270 டன்கள் மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. இது 58.96 சதவிகிதம் சரிவு ஆகும் என்று அசோசம் அமைப்பு தெரிவித்துள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon