மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

51,000 கார்களை திரும்பப் பெறும் ரினால்ட் நிசான்!

51,000 கார்களை திரும்பப் பெறும் ரினால்ட் நிசான்!

ரினால்ட் நிசான் நிறுவனம் தங்களது கிவிட் மற்றும் டட்சன் ரெடி-கோ கார்களில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்து தருவதற்காக சுமார் 51,000 கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரினால்ட் நிறுவனமும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான் நிறுவனமும் இணைந்து சென்னையை அடுத்த ஒரகடம் நகரில் தயாரிப்பு ஆலை அமைத்து கார்களைத் தயாரித்து இந்தியா மற்றும் உலக நாடுகளில் விற்பனை செய்து வருகின்றன. ரினால்ட் நிறுவனத்தின் புதிய மாடலான கிவிட் மற்றும் நிசான் நிறுவனத்தின் புதிய மாடலான டட்சன் ரெடி-கோ கார்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகின.

ஆனால், கிவிட் கார்களின் என்ஜின் எரிவாயு ஹோஸ்களில் (குழாய்) பழுது ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. எனவே, இந்த ஹோஸ்களில் கிளிப் பொருத்தி பிரச்னையை சரிசெய்வதற்கு முடிவு செய்துள்ள ரினால்ட், 2015 அக்டோபர் மாதம் முதல் 2016ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட சுமார் 50,000 கிவிட் கார்கள் (800 சி.சி) அனைத்தையும் பரிசோதனை செய்து பிரச்னையை இலவசமாகவே சரிசெய்வதாக அறிவித்துள்ளது.

அதேபோல, நிசான் நிறுவனம் இந்தாண்டு மே மாதம் 18ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட சுமார் 932 ரெடி-கோ கார்களைத் திரும்பப் பெற்று என்ஜின் எரிவாயு அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரிசெய்து தருவதாக அறிவித்துள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது