மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

பார் கவுன்சில் செல்வத்திற்கு எதிராக ராஜினாமா!

பார் கவுன்சில் செல்வத்திற்கு எதிராக ராஜினாமா!

அண்மையில், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை தொடர்பான சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த சட்டத் திருத்தம் வழக்கறிஞர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது என்று தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இதற்கு எதிப்புத் தெரிவித்து, நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “இந்த சட்டத் திருத்தப்படி வழக்கறிஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாது. இந்தத் திருத்தம் குறித்து வழக்கறிஞர்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்.

இந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்யவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் அங்கம்வகிக்கும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவரும், வழக்கறிஞருமான ஐயப்பமணி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘வழக்கறிஞர்கள்மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் சட்டத் திருத்தத்துக்கு தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் தலைவர் செல்வம் முக்கியப் பதவிவகிக்கும் இருபத்தி ஐந்து பேர் கொண்ட உறுப்பினர்களிடம் இந்த புதிய சட்டம்குறித்து எந்தவித ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக செயல்பட்டு நீதிபதி கொண்டுவந்த சட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து ஒப்புதல் கையெழுத்து அளித்துள்ளார்.

இது, பார் கவுன்சில் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் நிர்வாகிகளிடையேயும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார் கவுன்சில் தலைவர் செல்வம் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon