மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் நெருக்கடி!

விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் நெருக்கடி!

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் துவண்டுபோயிருக்கும் விஜயகாந்துக்கு புதிதாக ஒரு தலைவலி உருவாகியிருக்கிறது. விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த மாணவன் மரணம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாமண்டூரில் இருக்கும் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்த மாணவர் சிவசுப்பிரமணியன், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கல்லூரி வளாகத்தினுள் இறந்துகிடந்தார். மாணவர் மின்சாரம்தாக்கி இறந்ததாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறியநிலையில், மாணவனின் தந்தை சீராளன் “என் மகன் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை. இது இயற்கைக்கு மாறான மரணம்” என்று படாளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல் துறையினரும் சீராளனின் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்கு பதிந்துள்ளனர். ஆனால், போலீஸ் அதிகாரிகள் இதை முறையாக விசாரிக்கவில்லை என்றும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சீராளன். மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், மாணவர் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி காஞ்சிபுரம் போலீசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon