மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

இயற்கையின் துணையோடு இதய நோயை வெல்வோம்!

இயற்கையின் துணையோடு இதய நோயை வெல்வோம்!

இந்தியாவைப் பொறுத்தவரை இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதை தடுக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய எளிய வழி நம் சமையல் அறையிலேயே இருக்கிறது.

தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து... சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.

பொதுவாக, நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாப்பதுடன் கொழுப்பைக் கரைக்கும். ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கும். கல்லீரல், கணையத்தைப் பாதுகாக்கும். அந்த வகையில் கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரிசெய்யக்கூடியது இந்த நெல்லிக்காய்.

இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். இப்படி செய்தால் உடனடியாக இதய படபடப்பு அடங்குவதோடு காலப்போக்கில் இதயம் பலப்படும்.

நம் வீடுகளில் இஞ்சி, பூண்டு இல்லாத சமையலே கிடையாது. ஆனாலும் அதை சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். உதாரணமாக இஞ்சியை துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்து வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம், ஜீரணக்கோளாறு, சளி பிரச்னை உள்ளிட்ட உடல்கோளாறுகள் சரியாகும். அதிலும் முக்கியமாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்.

அதேபோல் பூண்டும் ரத்த அழுத்தத்தை சரி செய்யக்கூடியது. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலுவூட்டும்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon