மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

கிரிக்கெட்: மிடில் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா

கிரிக்கெட்: மிடில் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா

இந்தியா -ஜிம்பாப்வேக்கு இடையே நடந்து வரும் மூன்று மேட்சுகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு மேட்சுகளை வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இன்று ஹாராரே நகரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியையும் வென்று தொடரை 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி இன்று பிற்பகல் லேசான மழை பெய்யலாம் என்ற வானிலை முன்னறிவுப்பு இருந்தால் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். ஒப்பனிங் இறங்கிய மசகட்சா விக்கெட்டை குல்கர்னி 8 ரன்களில் தூக்க, அடுத்தடுத்த இரண்டு விக்கெட்களை சாஹல் வீழ்த்தினார். முன்று விக்கெட் இழந்த நிலையிலேயே ஜிம்பாப்வேயின் மிடில் ஆர்டர் வரிசை பும்ராவின் பந்துவீச்சில் தடுமாறத் தொடங்கியது. வெறும் 123 ரன்களில் 42 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது ஜிம்பாப்வே அணி. பின்னர் ஆடவந்த இந்திய அணி 21 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி டார்க்கெட் ஸ்கோரை அசால்டாக எட்டியது. இந்திய அணியின் பையஸ் பைசல் 55 ரன்களும் , லோகேஷ் ராகுல் 63 ரன்களும் எடுத்தனர்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon