மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

முடிந்தால் என்னை சட்டமன்றம்முன் கைது செய்யட்டும்: விஜயதாரணி!

முடிந்தால் என்னை சட்டமன்றம்முன் கைது செய்யட்டும்: விஜயதாரணி!

கடந்த 2015ஆம் வருடம் செப் 27ஆம் தேதி கருங்கல் பகுதியில் நடந்த கூட்டம் ஒன்றில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதாரணிமீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று ஜுன் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது விஜயதாரணி நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஜயதாரணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நாகர்கோவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நாம் எம்எல்ஏ விஜயதாரணியை தொடர்புகொண்டு பேசினோம்.

‘மதுவால் தமிழகப் பெண்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. குடும்பங்கள் அழிவுக்கு மது ஒரு காரணமாக அமைகிறது. எனவே, தாய்மை உணர்வோடு மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கருங்கலில் நடந்த கூட்டத்தில் பேசினேன். இதில் எங்கிருந்து வந்தது அவதூறு? நான் அவதூறாகப் பேசினேன் என அரசு வழக்கறிஞர் ஞானசேகரன் புகாரின்பேரில் என்மீது வழக்கு பதிவுசெய்து இன்று பிடிவாரண்ட் வரை நீண்டுள்ளது.

மது விலக்கு கேட்டு போராடியது தவறா? தமிழகப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க குரல் கொடுத்தது பிழையா? இன்று என் கணவர் மறைந்து நூறாவது நாள் நினைவு அஞ்சலிக் கூட்டம் நடக்கிறது. நாளை சட்டமன்றக் கூட்டம் தொடங்குகிறது. காங்கிரஸ் கொறடா நான். கட்டாயம் சட்டமன்றம் செல்லவேண்டும். இதன்காரணமாக என் மீது வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்ட பின்பும் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் பிடிவாரண்ட் வாங்கி, எனக்கு அவமானத்தை உண்டாக்க முதலமைச்சரின் அரசு நினைக்கிறதோ என ஐயப்பாடு எழுகிறது. நாளை கட்டாயம் சட்டமன்றம் போவேன். முடிந்தால் என்னை அங்கு கைது செய்துகொள்ளட்டும். எது வந்தாலும் சரி, மதுவிலக்குக்கான குரலை தொடர்ந்து ஓங்கி ஒலிப்பேன். பின்வாங்க மாட்டேன்’ என்றார் உறுதியான குரலில்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon