மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

பாஜக ஆளும் மாநிலங்களில் மது விலக்கு- நிதிஷ் குமார்!

பாஜக ஆளும் மாநிலங்களில் மது விலக்கு- நிதிஷ் குமார்!

‘பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டபிறகு கொள்ளை, விபத்து, கடத்தல், பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன’ என்கிறார் நிதிஷ் குமார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார்”பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று இந்த மண்டபத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பெண்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று உறுதியளித்திருந்தேன். அதன்படி, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியிருக்கிறேன்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, 2 ஆண்டுகள் நிறைவுசெய்ததை நாடு முழுவதும் அக்கட்சியினர் வெற்றி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அது போலியான வெற்றிக் கொண்டாட்டமாகும்.

உண்மையில், பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டபிறகு ஒவ்வொரு குடும்பமும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளது. நீண்டகாலமாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் முதல்வர் பதவியில் பிரதமர் நரேந்திர மோடி இருந்துள்ளார். இது, பூரண மதுவிலக்கு கொள்கைக்கு அவர் ஆதரவானவர் என்பதையே காட்டுகிறது. எனவே, பாஜக ஆளும் மாநிலங்களிலாவது பூரண மதுவிலக்கை அமல்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon