மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

அலுவலகம் இல்லாமல் தவிக்கும் திமுக எம்.எல்.ஏக்கள்!

அலுவலகம் இல்லாமல் தவிக்கும் திமுக எம்.எல்.ஏக்கள்!

‘சட்டமன்ற அலுவலகம் இல்லாமல் மக்கள் எப்படி தங்கள் தேவைக்காக எங்களை அணுகுவார்கள், மனு கொடுப்பார்கள்?’ என கேள்வி எழுப்புகின்றனர் நெய்வேலி திமுக எம்எல்ஏ சபா ராஜேந்திரன் மற்றும் திட்டக்குடி தனித் தொகுதி திமுக எம்எல்ஏ வி.கணேசன் ஆகியோர். என்ன பிரச்னை? என்று எம்எல்ஏ சபா.ராஜேந்திரனிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:

‘1996ல் திமுக ஆட்சிக் காலத்தில் தொகுதி மக்கள் எம்எல்ஏ-வை சந்திப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு தொகுதிக்கும் எம்எல்ஏ அலுவலகம் கட்டப்பட்டது. இதனால் மக்கள், எம்எல்ஏ-க்கள் அலுவலகத்துக்கு வந்து எளிமையாக மனுக்கள் கொடுத்தனர். எம்எல்ஏ-க்களும் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு மக்களோடு ஐக்கியமாக இருந்தார்கள். ஆட்சி மாறியதும் அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுக கட்டிய அலுவலகம் என்ற ஒரே காரணத்துக்காக எம்எல்ஏ அலுவலகத்துக்குப் போகாமலே தவிர்த்துவந்தார்கள்.

அதனால், பராமரிப்பு இல்லாமல் பல அலுவலகங்கள் பாழாகிப்போனதும் உண்டு. 2011ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பில் சில தொகுதிகள் மாறியதால், புதிய அலுவலகங்கள் கட்டப்பட்டன. ஆனால் அவை திறக்கப்படாமலே உள்ளன. தமிழகம் முழுக்க இதுதான் நிலை.தற்போது, 2016-ல் நெய்வேலியில் வென்ற எனக்கும், திட்டக்குடியில் வென்ற வி.கணேசனுக்கும் எம்எல்ஏ அலுவலகம் இல்லை. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் கவனத்துக்குக் கொண்டுசென்று எங்கள் அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அவரோ, ‘’முதல்வர் ஜெயலலிதா இன்னும் காணொலிமூலம் அலுவலகத்தைத் திறக்கவில்லை. அவர் திறந்து வைத்தபின் உங்களுக்கு வழங்குகிறேன்’ என்கிறார். எங்களுக்கு விரைவில் அலுவலகம் வழங்கப்பட வேண்டும்’ என்றார்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon