மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

மேக் மை டிரிப்.காமின் சக்சஸ் ஃபார்முலா

மேக் மை டிரிப்.காமின் சக்சஸ் ஃபார்முலா

ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகள் கடந்த சில வருடங்களாகவே ஹோட்டல் வாடிக்கையாளர்களைக் கவர முடியாமல் திணறி வருகின்றன. ஆனால், இந்தியாவின் மிகப் பெரும் ஆன்லைன் டிராவல் ஏஜென்சியான மேக் மை டிரிப்.காம் இந்த விதியை மாற்றி எழுதியுள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமான மேக் மை டிரிப்.காம், கடந்த 2011-12 ஆம் ஆண்டு நிலவரப்படி, தனது மொத்த வருவாயில் 80 சதவிகிதத்தை விமானம் தொடர்பான வர்த்தகத்தின்மூலமாகவே பெற்றுவந்தது. இந்நிலையில், நடப்பு பொருளாதார ஆண்டுக்கான வருவாயில் 50 சதவிகிதத்தை ஹோட்டல்கள் மற்றும் ஹோட்டல் பேக்கேஜ்கள் மூலமாக பெற்றுள்ளதாக மேக் மை டிரிப்.காமின் துணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் மாகவ் தெரிவித்துள்ளார்.

கடந்த பொருளாதார ஆண்டில் 400 நகரங்களிலிருந்தே ஆர்டர்கள் வந்தநிலையில், நடப்பு பொருளாதார ஆண்டில் 677 நகரங்களிலிருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. இந்த மாற்றத்துக்கு பிராட்பேண்ட் செயல்திறனே காரணம் எனும் ராஜேஷ் மாகவ், சில ஆண்டுகளுக்குமுன் இணைய செயல்திறன் குறைவாக இருந்ததால் வாடிக்கையாளர்களால் மேக் மை டிரிப்பின் இணையதளத்தில் உள்ள ஹோட்டல்களின் புகைப்படத்தைக் காண முடியவில்லை. ஆனால், இப்போது செயல்திறன் அதிகரித்ததால் வாடிக்கையாளர்களும் அதிகரித்துள்ளனர் என்கிறார்.

அதேநேரம், இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இதை 70 சதவிகிதமாக ஆக்குவதே எங்கள் இலக்கு என்று தெரிவித்துள்ளார் ராஜேஷ் மக்வா. காரணம், விமான வர்த்தகத்தில் ஒற்றை இலக்க மார்ஜின்தான். ஆனால், ஹோட்டல்கள் தொடர்பான வர்த்தகத்திலோ இரட்டை இலக்க மார்ஜின் அதனால்தான் என்று, சீக்ரெட் சொல்கிறார். கச்சிதமான அப்ளிகேஷன், முழுமையான விவரங்கள், அதிகமான ஹோட்டல்கள் மற்றும் “Appfest”  “makemytrip wallet” “mytrip rewards” போன்ற புரொமோஷன் நடவடிக்கைகள் போன்றவையும் மேக் மை டிரிப்பின் இந்த வெற்றிக்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon