மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

உபேரை சமாளிக்க ரூ. 2,500 கோடி: ‘ஓலா’வின் மாஸ்டர் பிளான்

உபேரை சமாளிக்க ரூ. 2,500 கோடி: ‘ஓலா’வின் மாஸ்டர் பிளான்வெற்றிநடை போடும் தமிழகம்

பிரபல கார் அக்ரிகேட்டர் நிறுவனமான உபேர் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது. புதிய வாகனங்களை வாங்குவது, டிரைவர்களுக்கு அதிக மானியம் வழங்குவது, வாடிக்கையாளர்களை ஈர்க்கும்வகையில் சலுகைகள் கொடுப்பது, கேஷ் பேமென்டுகளை ஏற்றுக்கொள்வது போன்ற அதிரடி திட்டங்கள்தான் இதற்குக் காரணம். இந்தத் திட்டங்களால் கடந்த ஆண்டு 5 சதவிகிதமாக இருந்த உபேர் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் இந்த ஆண்டு தொடக்கத்தில் 40 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.

இந்த 35 சதவிகித மார்க்கெட் ஷேர் யாருடையது. வேறு யார்? இந்தியாவின் மிகப்பெரிய கேப் சர்வீஸ் நிறுவனமான ஓலா-வினுடையதுதான். தனது பரம எதிரியான உபேர் நிறுவனத்திடம் மார்க்கெட் ஷேர்களைப் பறிகொடுத்த ஓலா, கடந்த மார்ச் மாதம் ஒரு கிலோ மீட்டருக்கு 6 ரூபாய் வசூலிக்கும் ஓலா மைக்ரோ என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. இப்போதைக்கு மைக்ரோவால் ஓலாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது உண்மைதான். இந்த சேவையால்தான் இழந்த மார்க்கெட் ஷேர்களில் கொஞ்சத்தை மீட்டுள்ளது ஓலா.

ஆனால், கணிசமான மார்க்கெட் ஷேரை முழுமையாகக் கைப்பற்றநினைக்கும் ஓலா, அதற்குப் பெரும் முதலீடு தேவைப்படும் என்பதால் 300 முதல் 400 மில்லியன் டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) நிதி திரட்டவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் பின்னணி என்ன தெரியுமா? சீனாவில் உபேர் நிறுவனத்துக்கு கடும் போட்டியாக உள்ள Didi Chuxing நிறுவனம் முதலில் 600 மில்லியன் டாலர் நிதி திரட்டிய நிலையில், கடந்த மே மாதம் புதிதாக ஐ போன் தயாரிப்பாளர்களிடமிருந்து 1 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. எனவே, இதேபோல் நிதி திரட்டி உபேரை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறது ஓலா. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓலா 500 மில்லியன் டாலர் நிதி திரட்டியது என்பது நினைவுகூரத்தக்கது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon