மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

டாடாவை முந்திய டொயோட்டா

டாடாவை முந்திய டொயோட்டா

டொயோட்டா கிரிலோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இன்னோவா கிரிஸ்டா காரின் விற்பனையானது கடந்த ஆண்டு மே மாதத்தோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மே மாதத்தில் அதிகரித்துள்ளது. அப்போது 11,511 விற்ற கார்கள் இப்போது 12,614 ஆக அதிகரித்துள்ளது. இது, 9.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் போட்டி நிறுவனமான டாடா மோட்டார்ஸின் விற்பனை 26.7 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. இந்த கார் பத்தாயிரம் என்ற அளவிலாவது விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9,456 என்ற அளவிலேயே நின்றுவிட்டது. சந்தையில் டாடா மோட்டார்ஸைவிட டொயோட்டாவின் கார்கள் நன்கு விற்பனையாவதை இதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்நிலையில், கடந்த மே 2ஆம் தேதி டொயோட்டா நிறுவனத்தின் சார்பில் இன்னோவா கிரிஸ்டா என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 13.83 லட்சம் ஆகும். இந்நிறுவனத்தின் முந்தைய காரானது 2.4 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு மற்றும் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஸ்ஸன் என்ற தொழில்நுட்ப அடிப்படையிலானது. தற்போது, இந்த புதிய காரானது 2.8 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவையும், 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஸ்ஸன் கொண்டிருப்பதால் சந்தையில் இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

டாடா மோட்டார்ஸின் டியாகோ கார்கள் நன்கு விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்தளவு விற்பனையாகவில்லை. டாடா மோட்டார்ஸ் கார்களானது 2016 நிதிஆண்டில் மொத்தமாக 1,49,420 கார்கள் விற்றுள்ளது. இது, கடந்த நிதி ஆண்டை ஒப்பிடும்போது 7.9 சதவிகிதம் வீழ்ச்சியாகும். டாடாவின் டியாகோவானது ஏப்ரல் 2016 வரை 3,022 கார்கள் விற்றிருந்தன. இது, மே மாதத்தில் 3,287 ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில், டாடா டியாகோமீதான எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு விற்பனை அடிப்படையில் டாடாவை முந்தியுள்ளது டொயோட்டா.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon