மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

கங்கை நதிக்கரையில் திருவள்ளுவருக்குச் சிலை

கங்கை நதிக்கரையில் திருவள்ளுவருக்குச் சிலை

இரண்டே அடிகளில் மனிதனின் அக, புற வாழ்வைப் பேசிய பொய்யாப்புலவர் வள்ளுவருக்கு 12 அடி உயரமுள்ள சிலையை, கங்கை நதிக்கரை நகரமான ஹரித்துவாரில் அமைக்க முடிவு செய்துள்ளார் பாஜக உறுப்பினர் தருண் விஜய். பாஜக எம்.பி.யான தருண் விஜய் தமிழ்மீதும் வள்ளுவரின் குறள்மீதும் ஆழமான பற்றும் அக்கறையும் கொண்டவர் அவரின் முயற்சியில்தான் இந்த திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரில் அமையவிருக்கிறது.

“இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடமாக ஹரித்துவார் உள்ளது. இந்த இடத்தில் திருவள்ளுவர் சிலையை வைத்தால் எல்லா மக்களும் அவரது புகழையும், திருக்குறளின் போதனைகளையும் அறிந்து கொள்வார்கள். திருவள்ளுவர் போதித்த சமத்துவம், ஏற்றத்தாழ்வின்மை, வாழ்வியல் அறம் போன்றவை இன்றைய காலச்சூழலில் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்” என்றார் தருண் விஜய். ஹரித்துவாரில் அமையப்போகும் இந்த திருவள்ளுவர் சிலையை நாமக்கல் மாவட்டம், கூலிப்பட்டியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் எல்.எம்.பி.குமரேசன் வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்தச் சிலை 35 நாட்களில் 20பேர் கொண்ட குழுவால் 20 லட்ச ரூபாய் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4.5 டன் எடையுள்ள திருவள்ளுவர் சிலையை நேற்று ஹரித்துவாருக்கு அனுப்பிவைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்கள் அனைவரும் திருவள்ளுவர் வேடம் அணிந்து பங்கேற்றனர். இதையடுத்து, ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் வருகிற 26ஆம் தேதி நிறுவப்படவுள்ளது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon