மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

"ராக்கி - ஹோலி - இந்தி " - அப்டேட் குமாரு

belikebro என்பது முகநூலில் பிரபலமான கார்ட்டூன் பக்கம். தாடிவைத்த ஒரே முகம். அதில் சின்ன மாற்றங்களின்மூலம் ஜோக்குகளை சொல்வது வழக்கம். தமிழ் வாசகர்களுக்கு டயலாக் பாக்ஸில் தமிழில் மாற்றியுள்ளேன். அஜித்மீது வெறிகொண்ட ரசிகை ஒருவரின் படம்தான் இது. உண்மையில், ஷாலினி பார்த்தால் ‘பக்’கென்றுதான் இருக்கும்.

// ‏@udanpirappe

திடீர்னு சிம்பு படத்தை கட்டாயமா பார்க்கணும்னு ஆர்டர்போட்டா உங்களுக்கு எப்படி இருக்கும்?

அது மாதிரிதான்டா இந்தித் திணிப்பும். ரொம்பக் கஷ்டம்டா //

//@vathanybq

கோபத்தில் யாரையாவது தாக்கவேண்டும் அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்தக் காரியமும் நிகழ்வதில்லை.! //

//@BoopatyMurugesh

அழகான பெண்களோட தமிழ்நாடு வந்த இந்திக்காரன், முதல்ல ராக்கி கொண்டாடியதால்தான் இந்தி எதிர்ப்பு.

ஹோலி கொண்டாடியிருந்தான்னா இந்தி பரவிருக்கும்.. //

//@thoatta

எதிரிகள்மீது மதிப்பளிக்கக்கூடிய ஒரு விஷயம், அவர்கள் நண்பர்களைப்போல துரோகம் செய்வதில்லை-/ //

//@vinodhkrs

அது ஏன்டா, என்னப் பாத்து அந்தக் கேள்விய கேட்ட??

அம்மா டெல்லி போறாங்களே, பைலட் உட்காந்துகிட்டே ஓட்டுவாரா இல்ல, நின்னுட்டு ஓட்டுவாரான்னு கேக்குறாங்க //

//@udaya_Jisnu

சேகுவேரா டி-சர்ட் போடக்கூடாதுன்னு சொல்லல,

நேதாஜிக்கும், பகத்சிங்குக்கும் போட்டிருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்... //

// ‏@i_rajtuty

''மொழியை வைத்து அரசியல் கூடாது'' : தமிழிசை சவுந்தரராஜன் # மதத்தைவைத்து மட்டும் அரசியல் செய்யலாம்போல. 😕//

//@Aasifniyaz

ஆனா, இப்ப பூராப்பேரும் கலைஞரை எதுக்குத் திட்டறாங்கன்னுதான் புரியலை. இத்தனை வருசமா சமஸ்கிருதம் படிக்க தவிச்சுக்கிட்டு இருந்த மாதிரி..?? //

//‏@maninilas

தமிழர் பகுதிகளில் ராணுவத்தை விலக்க சிறிசேனவுக்கு கருணாநிதி வலியுறுத்தல்.

விலக்கவில்லை என்றால் தலைவர் மறுபடியும் உண்ணாவிரதம் இருப்பார் //

//@palanikannan04

தமிழ் ஆசிரியருக்கும், ஆங்கில ஆசிரியருக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டான் மாணவன்.

"அய்யா"வுக்கும் "சார்"க்கும் உள்ள வித்தியாசம் என்றேன் நான்.. //

// வாசுகி பாஸ்கர்

13 June at 11:59

சாதியை எதிர்ப்பவன்தான் அதைக் குறித்து அதிகம் பேசுகிறானா?

கண்டிப்பா, அவன்தான் பேசுவான். இந்த நாட்டில் எதுகுறித்துப் பேசுவதற்கும் சாதி நிலைப்பாடு என்பது ஒரு தகுதி. இந்தியாவைவிட்டு வெளியே போனால் மதம். நண்பர் ஒருத்தர் இந்து மதம் ஒரு நோய்ன்னு போஸ்ட் போட்டு இருந்தார், அவர் பெயர் கிருஸ்தவப் பெயராக இருந்ததால் ஒருத்தர் கமெண்ட் போட்டார் "அப்போ கிருஸ்தவம்"?ன்னு! அதுக்கு நண்பர் "எய்ட்ஸ்'ன்னு ஒரே வார்த்தையில சொல்லி வாயடைத்தார்!

இதைத்தான் நான் தகுதின்னு சொல்றேன், சுய விமர்சனம் செய்துகொள்ளத் தயாராக இல்லாதவன், பெருமை குழியில் அடைபட்டவன், அதிகாரம் பேசுகிறவன், தனித்துவம் பேசுகிறவன், நியாயமா வேறு எதுக்கும் நியாயம்சொல்ல தகுதி அற்றவனே! அதில் இருந்து வெளியில வந்தா, அதிகாரக் குரலுக்கு எதிரா பேசும்போது அது தனிப்பட்ட தாக்குதலாக அவனுக்கு உறைக்க வேண்டிய அவசியமேயில்லை!

இப்போகூட பாருங்களேன்! எனக்கும் ராமதாசுக்கும் என்ன பங்காளி பிரச்னையா? ஒரு மண்ணும் கிடையாது, ஆனா 25 வருடம் சிறையில்கழித்த பேரறிவாளன் விவகாரத்தில் ஆதரவாக இருக்கும்போது, 25 வயசுவரை கூட வாழவிடாம நடந்த ஆணவக் கொலைகளுக்கு நமட்டுச் சிரிப்போடு புறக்கணித்தவர் பேரறிவாளன் குறித்துப் பேச என்ன தகுதியிருக்கு? பேரறிவாளன் இந்த சூழ்ச்சியில் சிக்காமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, ஊர் எதிர்க்க திருமணம் செய்து இருந்தால் அவர் வாழ்க்கை எப்பவோ முடிந்திருக்க வாய்ப்பு இருக்கத்தானே செய்யுது?

சினிமாவுல நடிகன் கருத்து சொல்வதற்கே தனிப்பட்ட தகுதி அவருக்கு வேண்டுமென்று எதிர்பார்க்கும் நாம், நிஜ வாழ்க்கையில், பொது வாழ்க்கையில் பொது விவகாரங்களின் நிலைப்பாடு கொண்டுள்ள நாம், அதுகுறித்துப் பேச அந்தந்த தகுதியை அடைந்திருக்க வேண்டுமென்பது அவசியம்தான். இல்லையெனில் இந்த ஒப்பீடுகளைத் தவிர்க்க இயலாது!

இந்தியாவைப் பொருத்தவரை, எதைப் பற்றி பேசுவதற்கும் "சாதி நிலைப்பாடு" ஒரு தகுதி, அது சாதியை தகுதியாக நினைப்பவர்களுக்குப் புரியாது! //

//Thiru Yo

ஈழம், ராஜீவ் கொலைவழக்கு, நீதிமன்றக் கொலை தண்டனை போன்ற விடயங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பேசியதை, எழுதியதை அச்சுப்பிசகாமல் கூடவே அருவருப்பையும் சேர்த்து தற்போது இணையதள திமுக பரப்புரையாளர்கள் எழுதுகிறார்கள். இப்போதைய திமுக அதன் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்திவருகிறது.

பெரியார், அம்பேத்கர் நிலைநாட்டிய கோட்பாடுகளுக்கும், தாக்கத்திற்கும் எதிர்திசையில் திமுக ஒரு கையில் கார்ப்பரேட்களையும், மறுகையில் இந்துத்துவத்தையும் அணைத்துக்கொள்கிறது. தங்கள் கட்சி, கொள்கை, தலைவர்மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள இத்தகைய அருவருப்பான வழிகளை தேர்ந்தெடுத்திருப்பது, பெரியார் இயக்கங்களிலிருந்து வந்ததாகச் சொல்லிக்கொண்டே பெரியாரைக் கொலைசெய்தல் அல்லாமல் வேறில்லை.

தன்மீது செருப்பு, மலம் எறிந்தவர்களை அருவருப்பாக பெரியார் பேசியதாக எந்தப் பதிவும் இல்லை. அரைகுறைகளுக்கு இதெல்லாம் எங்கு தெரியப்போகிறது. கனவோடு தொடங்கிய ஒரு இயக்கம் தன் தலையில் தீவைத்த கதையாக நவீன திமுக விளங்குகிறது. //

-லாக் ஆஃப்

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon