மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

மத்திய அமைச்சர்களுக்கு மோடி கடிதம்

மத்திய அமைச்சர்களுக்கு மோடி கடிதம்

பிரதமர் மோடி, அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் செவ்வாய்க்கிழமை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘ஜுன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம் என்பது நம்முடைய வாழ்க்கையில் யோகக் கலையை ஓர் அங்கமாக மாற்றுவதற்கான வழியாகும். யோகா தினத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும். அனைத்து வயதினரிடமும் யோகா சென்று சேரும்போது அவர்களுடைய உடலும், மனதும் மேம்படும். யோகா தினத்தை மக்களின் நிகழ்ச்சியாக மாற்றவே நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சியானது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். நிகழாண்டில் யோகா தின செயல்விளக்க நிகழ்ச்சியை சத்தீஸ்கரில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் யோகா தின நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட வேண்டும். எனவே, யோகக் கலையை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்ற நீங்கள் (மத்திய அமைச்சர்கள்) ஆதரவளிக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உலகெங்கிலும் 100 நாடுகளில் சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்கு ‘வாழும் கலை' அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வாஷிங்டன், பாஸ்டன், கொலம்பஸ், மின்னிசோட்டா, சான் பிரான்சிஸ்கோ, போர்ட்லாண்ட், லண்டன் போன்ற நகரங்களிலும் ரவிசங்கர் கலந்துகொள்ளும் யோகக் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon