மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: என்ன திட்டமிடப்போகிறார்கள்?

திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: என்ன திட்டமிடப்போகிறார்கள்?

ஆட்சியதிகாரத்தில் அமர நூலிழையில் வாய்ப்பை இழந்த திமுக வலிமையான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. 98 தொகுதிகளை வென்ற திமுக கூட்டணியில் காங்கிரஸ் 8ம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1ம், திமுக 89 தொகுதிகளும் வென்றன. இந்நிலையில், நாளை ஜுன் 16 ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. இதையொட்டி, திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இதில் வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். திமுக-வின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி சட்டமன்றத்தில் செயல்பட வேண்டும், எப்படிப் பேச வேண்டும்’ என்பது குறித்து விரிவாகப் பேச உள்ளனர். குறிப்பாக, சட்டமன்றத்துக்குள் புதிய உறுப்பினர்களாக அடியெடுத்து வைக்கிறவர்களுக்கு வழிகாட்டுதல்களும் இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் வழங்குவார்கள் என்கின்றனர் திமுக-வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள். தொடர்ந்து பேசியவர்கள், ‘துறைவாரியாக உள்ள அதிமுக அமைச்சர்களுக்கு ஏற்ப திமுக சட்டமன்ற உறுப்பினர்களை துறைவாரியாகப் பிரித்து, அந்தந்த துறைகளை கவனிக்க வேண்டும். அந்தந்த துறையில் உள்ள பிரச்னைகளைக் குறிப்பெடுத்து, அதற்கான தரவுகளை திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். துறைரீதியான முறைகேடுகளை சட்டமன்றத்துக்குள் எழுப்பவேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தெரியப்படுத்தியிருந்தார். அதுகுறித்தும் தற்போது அலசப்படலாம்’ என்றனர்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon