மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

என்.எஸ்.ஜி-யில் இந்தியா: பாகிஸ்தானுக்கு உறுத்தும் - சீனா

என்.எஸ்.ஜி-யில் இந்தியா: பாகிஸ்தானுக்கு உறுத்தும் - சீனா

என்.எஸ்.ஜி-யில் இந்தியா உறுப்பினராவது குறித்து சீன அரசுப் பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' நாளிதழில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில், " இந்தியாவும், பாகிஸ்தானும் பிராந்திய அளவில் அணுசக்தி வல்லமை கொண்ட நாடுகள். இரண்டு நாடுகளின் அணுசக்தித் திறன்களும் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியவை. இந்தச் சூழலில், என்எஸ்ஜி-யில் இந்தியா இடம்பெற நினைப்பது நிச்சயமாக பாகிஸ்தானுக்கு கடும் உறுத்தலாக அமைந்துவிடும். இந்தியாவின் அணுசக்தித் திறன் வளர்ச்சி அடைவதை பாகிஸ்தான் விரும்பாது. இந்நிலையில், என்எஸ்ஜி தொடர்பான இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்பட்டால் அது அணு ஆயுதப் போட்டியில் சென்று முடியும். இதனால் பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சீனாவின் தேச நலன்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தியா இந்த கூட்டமைப்பில் உறுப்பினராவது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ரஷீத் அல்மோவ் நம்பிக்கை தெரிவித்தார். பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்த பேட்டியில், " கடந்த ஓராண்டாக இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஷாங்காய் அமைப்பில் முழுமையான உறுப்பினராக வேண்டுமெனில் அந்த அமைப்பில் வரையறை செய்யப்பட்டுள்ள விதிமுறைகள முழுமையாக ஏற்றுக் கொண்டாக வேண்டும்" என்றார்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon