மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

நளினி விடுதலைவழக்கு: தமிழக அரசு மனு தாக்கல் செய்ய உத்தரவு

நளினி விடுதலைவழக்கு: தமிழக அரசு மனு தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி வழக்கில் வரும் 27ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நளினி சார்பில் அவரது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், `20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யலாம். அரசியலமைப்புச் சட்டம் 161ன் படி, மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னை விடுவிக்குமாறு நளினி கோரினார். ஆனால், தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை,’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீது விளக்கம் அளிக்க உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, `20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் நளினியை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்,’ என, நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கோரினார். இந்த நிலையில், அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் நேற்று ஆஜராகவில்லை.

இதனை அடுத்து, மனு தொடர்பாக வரும் 27ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon