மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

25 ஆண்டுகளாக சிறை: ரவிச்சந்திரனுக்கு முழு உடல் பரிசோதனை

25 ஆண்டுகளாக சிறை: ரவிச்சந்திரனுக்கு முழு உடல் பரிசோதனை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று வருபவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் மதுரை மத்திய சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். அவரது உடல் நலம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு உரிய மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ரவிச்சந்திரனின் தாயார் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ரவிச்சந்திரனுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ரவிச்சந்திரன் நேற்று காலை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு இருதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பியல் உள்ளிட்ட அனைத்து உடற்கூறு பிரிவு டாக்டர்கள், ரவிச்சந்திரன் உடலை முழுமையாக பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனையில், 15க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஈடுபட்டனர். ரவிச்சந்திரன், உடல் பரிசோதனைக்காக அனைத்தும் வார்டுகளுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். மேலும் ரவிச்சந்திரன் உடல் பரிசோதனையையொட்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம், “ என் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், என மனநலம் நன்றாகவே இருக்கிறது,” என்றார்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon