மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

விசைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

விசைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

சங்கரன்கோவிலில் ஊதிய உயர்வுகோரி விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டு நாட்களாக நீடித்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் விசைத்தறிகளில் 10000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது. இந்த நிலையில், ஊதிய உயர்வு குறித்து விசைத்தறிக்கூட தொழிலாளர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு நடந்த பேச்சுவாரத்தையின்போது, 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க உரிமையாளர்கள் முன்வந்தனர். ஆனால் தொழிலாளர்கள் தரப்பில் 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விசைத்தறித் தொழிலாளர்கள் நேற்று முன் தினம் முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon