மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

150,000 யூரோக்கள் ஃபைன் கட்டுமா ரஷியா?

150,000 யூரோக்கள் ஃபைன் கட்டுமா ரஷியா?

மெர்சிலே நகரத்தில் நடைபெற்ற இங்கிலாந்து ரஷியா இடையேயான போட்டியில் ஏற்பட்ட கலவரத்தினால் இரு நாடுகளுக்கும் நெருக்கடியான சூழ்நிலை உருவானது. இரு நாட்டு ரசிகர்களின் அராஜக நடவடிக்கைகளால் இந்நாடுகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டால் மிகவும் அவமானகரமான செயலாக இருக்கும் என்பதால் முடிந்தவரை இரு நாடுகளும் தங்களது வருத்தத்தையும், ரசிகர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்கள்.

ஆனால் ரஷியாவை UEFA விடுவதாக இல்லை. 1,50,000 யூரோக்களை ரஷிய கால்பந்தாட்ட அகாடெமி ஃபைன் கட்டவேண்டும் என்று அறிவித்துவிட்டது. UEFA-வின் இந்த செயல் பல கண்டனங்களை பெற்றுவருகிறது. UEFAவுக்கு மூன்று கேள்விகளை முன்வைதிருக்கின்றனர் ரஷிய கால்பந்தாட்ட அகாடெமியின் நிர்வாகிகளும், ரஷிய அரசாங்கத்தினரும். அவை...

* ரஷிய கால்பந்தாட்ட அகாடெமி கமெர்ஷியல் நிறுவனமாக இல்லாத பட்சத்தில், எப்படி இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக கட்டச்சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

* இங்கிலாந்தும் தான் அடிதடியில் ஈடுபட்டது. அவர்களுக்கு எந்த அபராதமும் இல்லாமல் ரஷியாவை மட்டும் அபராதம் கட்டச் சொல்வதை எப்படி ஏற்கமுடியும்.

* அடிதடியில் இறங்கியவர்களில் பலநாட்டு ரசிகர்களும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் ரஷிய நாட்டு ரசிகர்களை மட்டும் குண்டர்கள் அளவிற்கு மிகைப்படுத்திப் பேசுவது ஏன்?

மூன்று கேள்விகளில், மூன்றாவது கேள்விக்கு மட்டும் விடைதெரியும். ரசிகர்களிடையே நடைபெற்ற வாக்குவாதத்தில், இங்கிலாந்தின் வெய்னே ரூனியைப் போல உங்கள் டீமில் யார் இருக்கிறார்கள், சொத்தை டீம் என பேசியதால் கோபப்பட்ட ரஷிய ரசிகர்கள் தாக்குதலில் முதலில் ஈடுபட்டிருந்தனர். இந்த மாதிரியான பேச்சுக்களை பேசியதால் தான் இங்கிலாந்து அணி எச்சரிக்கையுடன் தப்பித்தது. அடிதடியில் இறங்கிய ரஷிய ரசிகர்களால் ரஷியா சிக்கிக்கொண்டது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon