மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

டாடா கன்சல்டன்சியின் வரி இரு மடங்கு உயர்வு

டாடா கன்சல்டன்சியின் வரி இரு மடங்கு உயர்வு

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக டாடா கன்சல்டன்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் இந்த நிதி ஆண்டில் ரூ.8,148.03 கோடியை வரியாகச் செலுத்தியுள்ளது. இது, கடந்த ஆண்டில் ரூ.3,962.83 கோடியாக இருந்தது. இதைவைத்துப் பார்க்கும்போது இரு மடங்கை வரியாகச் செலுத்தியுள்ளது.

இந்நிறுவனம், வருமான வரியாக மட்டும் கடந்த நிதி ஆண்டில் ரூ.7,995.14 கோடி செலுத்தியுள்ளது. இது, கடந்த ஆண்டில் ரூ.3,901.82 கோடியாக இருந்தது. இது ஒருபுறமென்றால் இந்நிறுவனம் செலுத்தும் மறைமுக வரியானது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.191.89 கோடி வரியாகச் செலுத்திய இந்நிறுவனம், அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.61.01 கோடியை வரியாக கட்டியுள்ளது. இது ஒருபுறமென்றால், எபிக் சிஸ்டம்ஸ் கார்ப் நிறுவனம் டிசிஎஸ் மீது வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தது. எபிக் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் ரகசியக் கோப்பு ஒன்றை டவுன்லோடு செய்துவிட்டதாகவும், அதன்மூலம் வர்த்தக ரகசியங்களைத் திருடிவிட்டதாகவும் வழக்கில் தெரிவித்திருந்தது. இதில், எபிக் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதன்காரணமாக, எபிக் நிறுவனத்துக்கு ரூ.6,227.03 கோடியை அளிக்கவேண்டிய கட்டாயம் டிசிஎஸ்-ஸுக்கு ஏற்பட்டது. இது எதிர்பாராத நிதிச்சுமையாக டிசிஎஸ்-ஸுக்கு இருந்தது. கடந்த நிதி ஆண்டில் டிசிஎஸ்-ஸின் எதிர்பாராத நிதிச்சுமைகள் ரூ.15,021.49 கோடியாக இருந்தது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது