மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

முதல்வர் - பிரதமர் சந்திப்பு: 29 கோரிக்கைகள்

முதல்வர் - பிரதமர் சந்திப்பு: 29 கோரிக்கைகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு தனி விமானத்தில் டெல்லி சென்றார். சென்னையிலிருந்து புறப்பட்ட ஜெயலலிதாவை கட்சியினர் உற்சாகமாக வழியனுப்பிவைத்தனர். பின்னர், மதியம் 2 மணியளவில் டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் அவருக்கு அதிமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர் ஜெயலலிதா டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். அங்கு கூடியிருந்த அதிமுக-வினரும், அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்கு வரவேற்பளித்தனர். மாலை 4.25 அளவில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் சென்றார். பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா பூங்கொத்தும், பொன்னாடையும் கொடுத்தார். பின்னர் இருவரும், சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினர். அப்போது ஜெயலலிதா தமிழகத்தின் முக்கியமான 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் அளித்தார்.

29 கோரிக்கைகள்:

மேகதாது அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கவேண்டும்.

தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கைவேண்டும்.

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும்.

நீர் ஒழுங்குமுறை வாரியம் அமைக்கவேண்டும்.

கூடங்குளத்தில் இரண்டாவது அணுவுலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழை ஆட்சி மொழியாக்கவேண்டும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கவேண்டும்.

இலங்கைவசம் இருக்கும் கச்சத்தீவை மீட்கவேண்டும்.

நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்.

பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் திட்டத்தை இணைக்கவேண்டும்.

மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த மாநில அரசை வலியுறுத்தக்கூடாது.

உணவு தானியங்களை வழங்குவதை குறைக்கக்கூடாது.

முல்லை பெரியாறு அணையை 152 அடி நீர்மட்டம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

21 மீனவர்களையும், 92 படகுகளையும் மீட்கவேண்டும்.

ஜி.எஸ்.டி. மசோதாவில் அதிமுக கோரியுள்ள திருத்தங்களை நிறைவேற்றவேண்டும்.

தமிழகம் பரிந்துரைத்துள்ள இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கவேண்டும்.

தமிழக அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவேண்டும்.

மருத்துவக் கல்லூரிகளில், தமிழகத்துக்கு 345 மருத்துவ இடங்களை வழங்கவேண்டும்.

கச்சத்தீவு அந்தோணியர் தேவாலயத்தைப் புதுப்பிக்கவேண்டும்.

மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கவேண்டும்.

கெயில் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றவேண்டும்.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற உதவிடவேண்டும்.

தமிழத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு 25,112 கோடி நிதி வழங்கவேண்டும். மத்திய அரசு 1,732 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கான மண்ணெண்ணை ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon