மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

மோடி-ஜெ. சந்திப்பு: பேரறிவாளன் பற்றி கோரிக்கையில்லை - என்ன சொல்கிறார் அற்புதம்மாள்!

மோடி-ஜெ. சந்திப்பு: பேரறிவாளன் பற்றி கோரிக்கையில்லை -  என்ன சொல்கிறார் அற்புதம்மாள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது தமிழகம் தொடர்பான 29 கோரிக்கைகளை முன்வைத்தார். தமிழகம் தொடர்பான பல முக்கியமான கோரிக்கைகள் அதில் இருந்தாலும் பிரதான கோரிக்கையான பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை தொடர்பாக அதில் எதுவும் இல்லை.

எழுவர் விடுதலைக்காக கடந்தவாரம் சென்னையில் பேரணி நடத்தப்பட்டு, முதல்வரின் தனிப்பிரிவில் மனுவும் அளிக்கப்பட்டது. இதன்பிறகு முதல்வர் பிரதமரைச் சந்தித்ததால், பேரறிவாளன் விடுதலைகுறித்து முதல்வர், மோடியிடம் கோரிக்கை வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படாதது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளிடம் கேட்டோம். அப்போது, " முதல்வர் அம்மா அறிவு உட்பட ஏழுபேரையும் விடுவிப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால், அவர் என்னவழியில் விடுவிக்கிறார் என்பதில் நான் கருத்துச் சொல்ல முடியாது இல்லையா... அவர் நிச்சயமாக விடுவிப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்றார்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon