மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 அக் 2019

போலீசை மிரட்டும் எடியூரப்பா ஆடியோ! பெங்களூரு பரபரப்பு

போலீசை மிரட்டும் எடியூரப்பா ஆடியோ! பெங்களூரு பரபரப்பு

ஒரு ஆடியோ வைரலாகி பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த ஆடியோ முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா சம்மந்தப்பட்டது என்பது பரபரப்புக்கான முக்கியக் காரணம்.

இமானுவேல் வருண் என்ற 24 வயது வாலிபர், கடந்த மாதம் 29ம் தேதி சிலரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கொலை சம்பவம் தொடர்பாக 11 பேரையும், வன்முறை தொடர்பாக 13 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது, மதம் தொடர்பான பிரச்னை கிடையாது என்றும், உடற்பயிற்சி மையம் அமைப்பது தொடர்பாக நண்பர்களுக்குள் நடந்த தகராறு என்றும் காவல்துறை கூறியுள்ளது.

இந்நிலையில்தான், ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கல்லப்பா. அதில், ஹாசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராகுல்குமார் ஷகபுர்வட்டை தொலைபேசியில் தொடர்புகொள்கிறார் எடியூரப்பா.

ராகுல்குமார் எடுத்துப் பேச, ‘நீங்கள் ஏற்கனவே 14-15 இந்து இளைஞர்களை கைது செய்துள்ளீர்கள். இன்னும் சிலரை டார்ச்சர் செய்து வருகிறீர்கள். தயவுசெய்து இனியாவது இப்படிச் செய்யாதீர்கள். இது சரியில்லை. இப்படிச் செய்தால், அரிசிகெரேயில் அமைதி பாதிக்கப்படலாம்’ என்கிறார் எடியூரப்பா. இந்த ஆடியோவை வெளியிட்ட கல்லப்பா, ‘ஓர் அதிகாரியை மிரட்டும் செயல் இது. விசாரணையில், எடியூரப்பா அதிகார துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளதற்கு இதுதான் சான்று’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon