மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

நடிகைகளின் ஹாலிவுட் என்ட்ரி: நஸ்ருதீன் ஷா நக்கல்

நடிகைகளின் ஹாலிவுட் என்ட்ரி: நஸ்ருதீன் ஷா நக்கல்

நஸ்ருதீன் ஷா சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இந்திய நடிகைகளுக்கு இந்திய நாட்டிலேயே ஆதரவு இல்லை என்ற எண்ணம் ஹாலிவுட்டில் பரவ, நஸ்ருதீன் ஷா மாதிரியான உலக சினிமா வியாபாரம் தெரிந்த நட்சத்திரம் ஒருவர் பேசுவதுதான் இயல்புக்கு மாறானதாக இருக்கிறது. சினிமா என்ற கலை அழிந்து, கமெர்ஷியல் கிங் ‘கான்’களுக்குப் பின்னால் சினிமா ரசிகர்கள் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு நஸ்ருதீன் ஷா கோபப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், அதே கான்கள் கிளாமருக்கும், டான்ஸுக்கும் மட்டும் பயன்படுத்திய நடிகைகள், கான்களே தொடமுடியாத உயரத்தை தொட்டுப் பிடித்திருப்பதை பாராட்டவில்லையென்றாலும் கலாய்க்காமல் இருக்கலாமே நஸ்ருதீன் ஷா அவர்களே!.

‘ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஹாலிவுட்டில் இடமிருக்காது. இந்த இரு பெண்களும் சென்றவேகத்தில் திரும்ப வந்துவிடுவார்கள்’ என்று பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியவர்களின் ஹாலிவுட் என்ட்ரிபற்றி பேசியிருக்கிறார் நஸ்ருதீன் ஷா.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon