மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

ஹெல்மெட் அணிந்தால்தான் இனி பெட்ரோல்!

ஹெல்மெட் அணிந்தால்தான் இனி பெட்ரோல்!

உலகளவில் சாலை விபத்துகளில் அதிகளவில் மரணமடைகிறவர்கள் இந்தியாவில்தான் அதிகம். அதிலும் தமிழகமே முதன்மை மாநிலமாக உள்ளது. சாலை விபத்துகளைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது ஹெல்மெட் கட்டாயம். ஆனாலும் விபத்துகள் குறையவில்லை, இழப்புகளும் குறையவில்லை. ஐதராபாத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டமியற்றியும் மக்கள் அதை கடைப்பிடிக்கவில்லை. ஹெல்மெட் அணியாமல் வரும் வழக்குகள் ஏழாயிரத்தைத் தாண்டியுள்ளது. அதனால், இதற்கு உடனடியாக இதற்குத் தீர்வு காணவேண்டும் என்று ஐதராபாத்தில் உள்ள போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போலீஸ் மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள்.

அந்தக் கூட்டத்தில், ஐதராபாத்தில் ஹெல்மெட் அணிந்து வருபவருக்கு மட்டும்தான் பெட்ரோல் வழங்க வேண்டும் என்ற சட்டத்தை இம்மாத இறுதியில் அமல்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்கள். இனி, ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களில் சென்றால் பெட்ரோல் கிடைக்காது என்ற செய்தி ஐதராபாத்வாசிகளிடம் பரவியிருக்கிறது. ஐதராபாத்தை முந்தி இந்த நடைமுறை தெலங்கானாவின் அடிலாபாத்தில் கடந்த 2ம் தேதியே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. இருசக்கர வாகன ஓட்டிகளிடம் இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள். இதே நடைமுறை சென்னையிலும் வந்தால் ஹெல்மெட் சட்டத்துக்கு கூடுதல் பலன் கிடைக்கலாம்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon