மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

விஜயகாந்தின் சமஸ்கிருதம் – அப்டேட்குமாரு

விஜயகாந்தின் சமஸ்கிருதம் – அப்டேட்குமாரு

டைம்லைனே 'தேமே' என்று கிடக்கிறது, விஜயகாந்தும் வைகோவும்தான் கருணைகாட்ட வேண்டும். கலைஞரும் இந்தி திணிப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு என சீரியஸ் பாலிடிக்ஸில் இறங்கிவிட்டதால் கையில் கண்டென்ட் இல்லாமல் எந்தநேரம் ட்விட்டரில் எட்டிப்பார்த்தாலும் யாராவது தத்துவத்தை உதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். மகிழ்ச்சி!

// @Pgp1Ramesh

காதல்ல ‘ஏமாத்திடுவாங்களோ’ன்ற பயத்தைவிட, ‘ஏமாந்திருவோமோ’ன்ற பயம்தான் அதிகம் பேருக்கு இருக்கு! //

// ‏@thoatta

செய்யாத உதவிகள் மட்டுமல்ல, சில சமயங்களில் செய்த உதவிகள்கூட குற்றவுணர்ச்சிகள் தருகின்றன. //

//@vigneshvicky341

சாப்பிடற இட்லி, தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது.//

// ‏@aruntwitz

தேவையான சமயத்தில் மட்டும் உண்மையைப் பேசுபவர்களுக்கு நல்லவர்கள் என்று பெயர். //

// ‏@palanikannan04

சொகுசான வாழ்க்கை என்பது ‘சொகுசு பஸ்’ போன்றது. அடிபட்டுட்டா ஓடாது. கஷ்டமான வாழ்க்கை என்பது ‘டவுன் பஸ்’ போன்றது. அடிபட்டாலும் ஓடிகிட்டே இருக்கும். //

//@pshiva475

1940-ல பிரிட்டிஷ் கவர்னர் போட்டு மிரட்டிய டிரஸ்ஸை இப்ப நம்மூரு பேண்டு வாத்திய பார்ட்டி போட்டுகிட்டுச் சுத்திகிட்டிருக்காங்க. #மாற்றம்ஒன்றேமாறாதது. //

//‏@roflkanth

ஐடி ஊழியர்களும் தொழிற்சங்கம் தொடங்கலாம்: தமிழக அரசு அனுமதி

அதிமுக ஆன்ட்ராய்டு அணி

திமுக ஹேக்கர்ஸ் அணி

தேமுதிக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அணி //

//@karthithiyini

பஸ்ல ஜன்னல் ஓரம் உட்கார்ந்தா முடி களையுது. நடுவுலன்னா நசுக்குறாங்க. ஓரமா உட்கார்ந்தா இடிக்குறாங்க. பேசாம பஸ்ஸுக்கு மேல குடை பிடிச்சுட்டு உட்கார்ந்துக்க போறேன். //

// @udaya_Jisnu

இங்கிலீஷ் தெரிஞ்சவனுக்கு அமெரிக்கா,

உருது தெரிஞ்சவனுக்கு துபாய்,

சமஸ்கிருதம் தெரிஞ்சா கவர்மென்ட் வேல,

தமிழ் தெரிஞ்சவனுக்கு... //

‏// @Thiru_navu

கேப்டன் விரும்பிப் பேசும் ஒரேமொழி சமஸ்கிருதம்! அதையும் எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! //

// பிரபாகரன் அழகர்சாமி

2 hrs ·

‘பேருந்துகளில் பஞ்சமர்களுக்கு இடமில்லை’ என்று பயணச்சீட்டின் பின்புறத்திலேயே அச்சடித்து, ஆதி திராவிடர்களை பேருந்தில் அனுமதிக்காமல் பஸ் கம்பெனிகள் நடத்தப்பட்ட காலம் இங்கிருந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக்குழு தலைவராக இருந்த நீதிக்கட்சியை சேர்ந்த பட்டிவீரன்பட்டி W.P.A. சவுந்தரப்பாண்டியன், அப்படிப்பட்ட பஸ் கம்பெனிகளின் லைசென்ஸ் முன்னறிவிப்பின்றி ரத்துசெய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்து, அந்த கொடுமையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இன்று, அந்த சவுந்தரபாண்டியனாரின் பேத்தி திருமதி திலகபாமா, தலித் அல்லாதார் கூட்டணி அமைத்த ராமதாஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். //

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon