மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

கேரளா வன்முறை: அறிக்கை கோரும் தேசிய மகளிர் ஆணையம்!

கேரளா வன்முறை: அறிக்கை கோரும் தேசிய மகளிர் ஆணையம்!

இலக்கிய வாசிப்புள்ளவர்கள் நினைவில் இருந்து நிச்சயம் ‘நினைவுகள் அழிவதில்லை’ நூல் மறைந்திருக்காது. ஒரு ஊரில் மூன்று இளைஞர்கள் சாதி, உழைப்பு சுரண்டலுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள். அந்த இளைஞர்களின் உதிரத்தால் விளைந்த ஊர்தான் கேரளாவின் கண்ணூர். இது இடதுசாரிகளுக்கு அடுத்தபடியாக இஸ்லாமிய அமைப்புகள், இந்து அமைப்புகள் ஒருசேர வலுவாக உள்ள மாவட்டம். மூன்று இசங்களும் நிறைந்த இம்மாவட்டம் பெரும்பாலும் பதற்ற தீயோடு கொந்தளிக்கும். இந்த வழக்கத்துக்கு ஏற்ப, கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடந்த மாதம் பெரும் வன்முறை நிகழ்ந்தது. இந்த வன்முறை தொடர்பாக தற்போது அறிக்கை அளிக்குமாறு அந்த மாநில அரசிடம் தேசிய மகளிர் ஆணையம் கோரியுள்ளது.

இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்ற தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம், அங்குள்ள பெண்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரிலேயே வன்முறை நிகழ்ந்தது கண்டிக்கத்தக்கது” என்றார்.

முன்னதாக, கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பினராயி கிராமத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில், ஏராளமான பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டதாக தேசிய மகளிர் ஆணையத்துக்குப் புகார் அனுப்பப்பட்டது. இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிறந்த கிராமம் பினராயி என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon