மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

மோடிக்கு எங்களைக்கண்டால் பயம்: கெஜ்ரிவால்

மோடிக்கு எங்களைக்கண்டால் பயம்: கெஜ்ரிவால்

டெல்லியில் அல்கா லம்பா, ஜர்னைல் சிங் உள்ளிட்ட 21 ஆத்மி எம்எல்ஏ-க்கள், சட்டப்பேரவைச் செயலர்களாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்த 21 எம்எல்ஏ-க்களும் இரட்டைப் பதவி வகிப்பதாகவும், அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரியும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதையடுத்து, 21 எம்எல்ஏ-க்களிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு பதிலளித்த எம்எல்ஏ-க்கள், தங்களை நேரில் அழைத்து விளக்கம் பெறவேண்டும் என்று கோரியுள்ளனர். இதற்கிடையே 21 எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும்வகையில், டெல்லி பேரவை உறுப்பினர்கள் சட்டம் 1997-ல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை ஆம்ஆத்மி அரசு நிறைவேற்றியது. இம்மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 21 ஆம்ஆத்மி எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்களின் அவசரக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன்பின் கருத்து தெரிவித்துள்ள

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படுகிறது. ஆம்ஆத்மியை கண்டு அஞ்சுகிறது” என்றார்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon