மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

வசூலிலும் மிரட்டும் காஞ்ஜூரிங் 2

வசூலிலும் மிரட்டும் காஞ்ஜூரிங் 2

சமீபத்தில் காஞ்ஜூரிங் இரண்டாம் பாகம் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. முதல் பார்ட் வெளியானபோது நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு ஆங்கிலப் பேய் படம் ஹிட்டானது இதுதான் என சொல்லப்பட்டது. அதேபோல வசூலும் வாரிக் கொட்டியது. முதல் பாகம் பார்த்த பெரியவர்கள் 'அல்லு இல்லை' என பேஸ்தடித்து வந்தால், கூட போன சிறுசுகள் "பொம்மை சூப்பர்ல" என சிலாகித்த காமெடியும் நடந்தது. தற்போது வெளியாகியுள்ள காஞ்ஜூரிங் பார்ட் 2 மூன்று நாட்களில் சென்னையில் மட்டுமே ரூ.1 கோடி வசூல் செய்துள்ளதாம். இப்படம் இந்தியா முழுவதும் ரூ. 20 கோடிகளுக்கு மேல்

வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon