மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

‘பட்டைய கிளப்பும் மல்லு ஆன்தம்’

‘பட்டைய கிளப்பும் மல்லு ஆன்தம்’

மல்லுகளின் கலாச்சாரத்தை ராப் இசையில் பாடி வெளிவந்துள்ள வீடியோ செம ஹிட் ஆகி இணையத்தில் இந்த வார வைரல் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ‘திஸ் இஸ் பெங்களூரு’ என ராப் பாடல் வீடியோ வெளியிட்ட ரினோஷ் ஜார்ஜ், இப்பாடலையும் பாடி வெளியிட்டுள்ளார். ‘பரோட்டாவும் கொத்து கறியும்,

மோகன்லாலும் மீன் கறியும்’ என மலையாளிகளின் உணவு கலாச்சாரத்தையும் ‘பீப் இல்லாமல் வாழமுடியாது’ (மௌனமாக்கப்பட்ட மொழியில்) என்றும் பாடியுள்ள ஜார்ஜ், மலையாளிகளின் வாழ்வோடு இணைந்த அனைத்தையும் அந்த ராப்பில் பாடியுள்ளார். இவ்வளவு ஏன்? அவர்களுக்குப் பிடித்த ‘மேன்சன் ஹவுஸ் பிராந்தி’யைக் கூட பாட்டில் இணைத்து ‘மல்லு ஆன்தம்’ பாடியுள்ளார். இரண்டு நாட்களில் ஒரு லட்சத்தையும் தாண்டிவிட்டது இதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon