மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

ஆப்பிள் ஐஓஎஸ் 10 வெளியீடு !

ஆப்பிள் ஐஓஎஸ் 10 வெளியீடு !

நேற்று நடந்த டெவலப்பர்ஸ் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் புதிய மொபைல் ஓ.எஸ் ஆன ‘ஐஓஎஸ் 10’-ஐ வெளியிட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டென்ட் அப்ளிகேஷனான 'சிரி' மூலம் மெசேஜ் அனுப்பும் வசதி, நாம் பேசுவதை அப்படியே மெயிலாக எழுத்தில் மாற்றும் வசதி, மெசேஜில் வார்த்தைக்கு ஏற்ப இமேஜ்களைப் பரிந்துரைக்கும் வசதி, லைவ் போட்டோ எடிட்டிங், புதிய லாக் ஸ்கிரீன் வடிவமைப்பு என வரிசை கட்டுகிறது அறிவிப்புகள்.

"ஐஒஎஸ் 10 என்பது எங்களின் இதுவரையில்லாத மிகப்பெரிய வெளியீடு ஆகும். செய்திகளின் வழியாக உங்களின் உணர்வுகளை இன்னும் துல்லியமாக தெரிவிக்க முடியும். இசை, வரைபடம், மற்றும் செய்திகளில் சக்தி வாய்ந்த மாற்றங்களை செய்துள்ளோம்" என ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் க்ரேக் பெடர்ஜி தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon