மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

வானிலை: சூப்பர் கணினியால் முடிவுக்கு வருகிறது பிரிட்டிஷ் முறை

வானிலை: சூப்பர் கணினியால் முடிவுக்கு வருகிறது பிரிட்டிஷ் முறை

வானிலையை அதி துல்லியமாக கணிப்பதற்காக ரூ.400 கோடி செலவில் சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நிறுவி வருகிறது. தற்போது இருக்கும் அமெரிக்க மாதிரிகளைப் போலவே முப்பரிமாண அச்சுக்களில் அதை உருவாக்கி வருகிறது. இது தற்போது நாம் புழங்கிவரும் பிரிட்டிஷ்கால முறை கணிப்பை முடிவுக்கு கொண்டுவரும். அதேபோல நடைமுறையில் இருக்கும் பாஸ்கரா சூப்பர் கம்ப்யூட்டர் முறையைவிட 10 மடங்கு அதிவேகமாகவும் துல்லியமாகவும் இருக்கும். பெருமழை, புயல்கள் மற்றும் மேக வெடிப்புகள் குறித்து கணிக்க உதவியாக முன்கூட்டியே எச்சரிக்கும்.

அனைத்தையும்விட முக்கியமாக இதன் கணிப்பின்மூலம் விவசாய உற்பத்தி 15% அதிகரிக்கும் என்றும் நாட்டின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் எப்போது விதைக்கவேண்டும், பாசனத்துக்கு அறிவுரை, உரம் எப்போது போடவேண்டும், மழை தவறும் பட்சத்தில் செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை ஆகியவற்றையும் இது செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon