மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

குல்பர்க் குற்றவாளிகளுக்கான தண்டனை மூன்றாவது முறையாக ஒத்தி வைப்பு!

குல்பர்க்  குற்றவாளிகளுக்கான தண்டனை மூன்றாவது முறையாக ஒத்தி வைப்பு!

குஜராத் குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டியில் நடைபெற்ற கலவரத்தில், 69

பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம், வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்ததில் 50-க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் உயிரிழந்தனர். இந்த ரயில் தீக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று பரப்பப்பட்ட வதந்தி குஜராத்தை கலவர பூமியாக்கியது. சுமார் 2,000-ம் மேற்பட்ட முஸ்லிம்கள் எரித்தும், அடித்தும் கொல்லப்பட்டார்கள். அப்போது நடந்த கலவரத்தில் அகமதாபாத் அருகேயுள்ள குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டியில் வசித்து வந்தவர்களின் மீது, ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதுடன், கட்டடத்துக்கும் தீ வைத்தது. இதில் முன்னாள் காங்கிரஸ்

எம்.பி. இஷ்ரத் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம்

தொடர்பாக 66 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்

விசாரணைகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி. தேசாய் தீர்ப்பு அளித்தார். இதில், விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவர் அதுல் வைத்யா உட்பட 24 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மேலும், பாஜக கவுன்சிலர் விபின் பட்டேல் உள்ளிட்ட 36 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை காலத்தில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை அறிவிக்கும் தேதி ஏற்கெனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால், தண்டனை விவரம் தற்போது மீண்டும் வரும் ஜுன் 17ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon