மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

தமிழகம் முழுக்க பொது இடங்களில் புகைபிடித்த 350 பேர் வழக்கு பதிவு

தமிழகம் முழுக்க பொது இடங்களில் புகைபிடித்த 350 பேர் வழக்கு பதிவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், தன்னுடைய புகைப்பட நிறுவனத்தின் அருகேயுள்ள தேநீர் கடையில் இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் நின்று கொண்டு அதிகமாக புகைபிடிப்பதால், வாடிக்கையாளர்கள் குறைந்து வியாபாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “சுமார் 90% கடைகளில் புகையிலை எச்சரிக்கை அறிவிப்புப் பலகை இல்லாமல் விற்பனை நடக்கிறது. சுமார் 99% கடைகளில் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொது இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அந்த ஆய்வறிக்கையை வரும் 20ம் தேதி தாக்கல் செய்யுமாறும் சுகாதாரத்துறை செயலர் மற்றும் காவல்துறை டிஜிபி உள்ளிட்டோருக்கு நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் புகைபிடிப்பவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் பொது இடங்களில் புகைப்பிடித்த 350 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் சென்னையில் சிகரெட் விற்கும் கடைகளிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon