மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

தமிழக அரசிடம் ஆதரவு கேட்கும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

தமிழக அரசிடம் ஆதரவு கேட்கும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

‘ஊதியக்குழுவின் மோசமான பரிந்துரை, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, 100% அளவில் அந்நிய முதலீடு என்றபெயரில் பன்னாட்டு, தனியார் நிறுவனங்களை புகுத்துவதைத் தடுத்தல் உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மொத்தம் சுமார் நாற்பது லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்கும் இந்தப் போராட்டத்தில் ரயில்வே தொழிற்சங்கங்கள் பிரதான பங்குவகிக்கின்றன.

‘போராட்டம் அறிவித்தும் இதுவரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. எனவே, எங்கள் போராட்டம் நிச்சயம் நடக்கும். நடந்தால் ஒரு ரயில்கூட இயங்காது. இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருக்கும் என்பது எங்களுக்குப் புரிகிறது. வருத்தமான விஷயம்தான். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை’ என்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார் எஸ்ஆர்எம்யு மாநிலச் செயலாளர் என்.கன்னையா. தொடர்ந்து பேசிய அவர், ‘உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநில அரசுகள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித்துள்ளன. தமிழக அரசிடமும் ஆதரவு கேட்க உள்ளோம்’ என்றார்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon