மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 29 ஜன 2020

கூலிப்படை தாக்குதலாக மாறிய ரசிகர்கள் சண்டை!

கூலிப்படை தாக்குதலாக மாறிய ரசிகர்கள் சண்டை!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் யூரோ போட்டியில் மோதலில் ஈடுபட்ட இங்கிலாந்து, ரஷ்ய நாட்டு கால்பந்தாட்ட ரசிகர்களில் பலரைக் கைதுசெய்து விசாரணை செய்து வருகிறது மெர்செய்ல் நகர நீதிமன்றம். அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரைஸ் ராபின், ‘மோதலில் ஈடுபட்டவர்கள் ரசிகர்கள் அல்ல. பயிற்சியளிக்கப்பட்ட குண்டர்கள்’ என்று ஒரு போடு போட்டார். சாதாரண ரசிகர்கள் மோதலாக தொடங்கிய வழக்கு வேறு பரிணாமத்துக்கு மாறியது.

‘ரஷியாவிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 12,000 ரசிகர்கள், மெர்செய்ல் நகரத்துக்கு கால்பந்தாட்டப் போட்டியைப் பார்க்க வந்திருக்கின்றனர். ஆனால், அவர்களில் 150 பேர் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட குண்டர்கள். அவர்கள்தான் இரு தரப்புக்குமிடையே சண்டையை தொடங்கியவர்கள். அதன்பின் கலவரமாக மாறி, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் சாதாரணமாக கையில் தான் தாக்கியிருக்கின்றனர். ஆனால், இவர்கள் இரும்பு ராடு போன்ற ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார்கள்” என்று வாதாடி அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருக்கிறார்.

அதேசமயம் கீழே கிடந்த ரஷ்ய நாட்டு ரசிகர்களையும் மீண்டும் மீண்டும் தாக்கிய 16 வயது சிறுவன் உட்பட இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தமாதிரியான சம்பவங்களால் அடுத்தடுத்தப் போட்டிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட ரியாட் படைகள் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றன.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon