மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

ஆசிரியைக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!

ஆசிரியைக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவந்த மாணவர்கள் 13 பேர் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் படிக்கவில்லை என்றும் அவர்களது காலில் பள்ளி ஆசிரியையான வைஜெயந்திமாலா, கடந்த 9ம் தேதி கற்பூரத்தால் சூடுவைத்தார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். ஆசிரியையால் சூடு வைக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பெருத்த அதிர்வலைகள் ஏற்பட்டது. இதைக்கண்ட கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, ஆசிரியை வைஜெயந்திமாலா சஸ்பெண்ட் ஆகி கைது செய்யப்பட்டார். மேலும், அப்பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரும் சஸ்பெண்ட் ஆனார். தற்போது ஆசிரியை வைஜெயந்திமாலா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில், நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ரோஸ்லின் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை ஏற்க இயலாது எனக்கூறி தள்ளுபடி செய்தார்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon