மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

சென்னை ரசாயனக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை ரசாயனக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை, எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்தில் இருந்து கடலில் ரசாயன கழிவுகளை விடுவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘எளிதில் தீப்பற்றக்கூடிய அமோனியாவை சென்னை துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் இருந்து கோரமண்டல் தொழிற்சாலைக்கு, குழாய்கள் மூலம் எவ்வித பாதுகாப்பு இல்லாமலும் கொண்டு செல்கின்றனர்.

உரம் தயாரிப்பு பணிகள் முடிந்தவுடன், கந்தக அமிலம், அமோனியம் உள்ளிட்ட ரசாயனங்களைச் சுத்திகரிக்காமலேயே நேரடியாக கடலில் விடப்படுவதால், சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் மட்டுமின்றி, கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்க உத்தரவிடவேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இதுகுறித்து நீதிபதிகள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், விஞ்ஞானி ஒருவர் மூலம் சம்மந்தப்பட்ட தொழிற்சாலையை, வரும் 29ம் தேதிக்குள் ஆய்வுசெய்து அந்த ஆய்வறிக்கையை வரும் ஜூலை 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon