மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

சீனாவில் பறக்கும் ட்ரோன் டாக்ஸிகள் அறிமுகப்படுத்த திட்டம்

சீனாவில் பறக்கும் ட்ரோன் டாக்ஸிகள் அறிமுகப்படுத்த திட்டம்

சீனாவில் சாலையில் செல்லும் டாக்ஸியை போல, ஆகாய மார்க்கமாக அழைத்து செல்லும் ‘ட்ரோன் டாக்ஸிகள்’ விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சீன நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள Ehang-184 எனும் ட்ரோன் டாக்ஸியை உருவாக்கி இருக்கிறது. இதைச் சோதிக்க அமெரிக்காவின் நெவடா மாகாண நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய ட்ரோன் டாக்ஸியானது குறைந்த உயரத்தில் பறக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு நபரை மட்டும் ஏற்றிச் செல்லும் வசதி கொண்டது. மேலும் தானியங்கியாக இயங்கக்கூடியது. செல்போன் ஆப் மூலம் கட்டுப்படுத்தக்கூடியது. இந்த ட்ரோன் செல்ல வேண்டிய இடத்தை முன்பாகவே செல்போன் ஆப்பில் பதிவிட்டுவிட்டால் சரியான இடத்துக்கு, குறித்த நேரத்தில் கொண்டு சேர்த்துவிடும். மேலும் புறப்படும் இடத்தில் இருந்து செங்குத்தாக மேலெழும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் டாக்ஸி, செங்குத்தாகத் தரையிறங்கவும் செய்யும். விபத்து ஏற்படாதவகையில், இதில் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்படும்பட்சத்தில் அதிகபட்ச சாத்தியக்கூறு உள்ள இடத்தில் தானாக தரையிறங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரோன் டாக்ஸியை இயக்க தரை கட்டுப்பாட்டு தளம் ஒன்றும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள சூழலில், இந்த புதிய பறக்கும் டாக்ஸியானது வரப்பிரசாதமாக திகழ்வதுடன், தங்களது நிறுவனத்துக்கு பெரிய லாபத்தை ஈட்டித்தரும் என்றும் இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் கருதுகிறது. சோதனைகள் வெற்றிபெறும் பட்சத்தில் விரைவில் சீனாவில் பறக்கும் ட்ரோன் டாக்ஸிகளைக் காணலாம்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon