மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

லிங்க்ட்இன் நிறுவனத்தைக் கைப்பற்றிய மைக்ரோசாஃப்ட்

லிங்க்ட்இன் நிறுவனத்தைக் கைப்பற்றிய மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பிரபல சமூக வலைதள நிறுவனமான லிங்க்ட்இன் நிறுவனத்தை 26.2 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. இந்த தகவல் வெளியான உடனேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனப் பங்குகள் 4 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. ஆனால், லிங்க்ட்இன் நிறுவனப்பங்குகள் 47 சதவிகிதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் சமூக வலைதளங்களில் ஒரு வலுவான இடத்தைப் பெற முடியும் என்று மைக்ரோசாஃப்ட் நம்புகிறது. தற்போது லிங்க்ட்இன் தளத்தில் 433 மில்லியன் பேர் பயனர்களாக உள்ளனர். இதன்காரணமாக இரண்டு நிறுவனங்களுக்குமே பிரகாசமான வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

லிங்க்ட்இன் நிறுவனம் தற்போது கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த காலாண்டில் 46 மில்லியன் டாலர் நஷ்டம் அடைந்தது. 2015ம் நிதியாண்டில் 166 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தது. தற்போது இந்நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் வாங்கியுள்ளதால் லிங்க்ட்இன் தனது நஷ்டத்தில் இருந்து மீளுமா என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது