மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 29)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 29)

ஓவியம் : ரஞ்சித் பரஞ்ஜோதி

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும், ‘டின்னர் வெளிய சாப்டுட்டு போய்டலாமா ஷமித்ரா’ என்றான் கதிர்.

‘இப்ப ஷமித்ரான்னு சொன்னியே அதான் கேஷுவலா இருக்கு’ என்று சொல்லிய ஷமித்ரா, ‘வெளியவே சாப்டுட்டு போகலாம்’ என்று ஒப்புதல் தெரிவித்தாள்.

புல்லட், ரெஸ்டாரன்ட் நோக்கிப் பறந்தது. புல்லட் பறந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இவர்களின் வாழ்வில் உயிருள்ள மனிதனாக இருந்த சந்தன் ‘கோமா பாடி’ என்ற கேரக்டருக்கு முழுதாக மாறிப் போனான்.

ஒரு ரூஃப் டாப் ரெஸ்டாரன்டுக்குச் சென்றார்கள். ஆர்டர் செய்து முடித்ததும், ஷமித்ராதான் ஆரம்பித்தாள்.

‘நான் நாளைக்கு சென்னை போலாம்னு இருக்கேன். பகல் டிரெயின் இல்லன்னா பஸ்ல போயிடறேன். இங்க நான் இருப்பதால் எந்தப் புண்ணியமும் இல்ல. உனக்குத்தான் வேலை’ என்றாள்.

‘எனக்கு பெருசா வேலை இல்ல, ஆனா எவ்ளோ நாள் இங்க இருக்க முடியும். நீங்க கிளம்புங்க, நான் டிக்கட் புக் பண்றேன்’ என்றான் கதிர்.

‘தேங்க்ஸ் கதிர்’ என்ற ஷமித்ரா, ‘உனக்கு கேர்ள் ஃபிரெண்டு இருக்கா கதிர்’ என்றாள். ஏதேனும் பேச வேண்டும் என்று சாதாரணமாகத்தான் கேட்டாள்.

கதிர் மொபைலை எடுத்து ஷமித்ராவிடம் காட்டினான்.

வாங்கிப் பார்த்தாள். உண்மையிலேயே அழகாக இருந்தாள். நல்ல உடற்கட்டு. யூனிக்கான முகம்.

‘செம க்யூட், கதிர். வாழ்த்துகள்’ என்றாள்.

‘ப்ச்’ என்ற கதிர் சிரித்தான். ‘பிரேக் அப் ஆயிடிச்சி’ என்றான்.

‘ஏன்டா’ என்று கூறிவிட்ட ஷமித்ரா, பின்பு ‘சாரி, ஏன் கதிர்’ என்று திருத்தினாள்.

கதிர் கொஞ்சம் யோசித்தான். சொல்லலாம் என்று முடிவெடுத்து சொல்ல ஆரம்பித்தான்.

‘அவ ரொம்ப வித்தியாசமா இருக்கா ஷமித்ரா.’

‘ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசம்தான் கதிர்.’

‘இல்ல ஷமி. இவளை லவ் பண்ணும்போதே, இவளுக்கு எக்ஸ் இருந்தாங்க. அதை நான் பெருசா எடுத்துக்கல.’

‘ஓகே., குட். நல்ல ஆட்டிட்யூட்.’

‘என்கூட ரிலேஷன்ஷிப்ல வந்ததுக்கு அப்புறமும் சிலபேர் கூட ஃப்ளிர்ட் பண்ணிட்டு இருந்தா.’

‘அது காமன் தான் கதிர். நீங்க ஃப்ளிர்ட் பண்றது இல்லையா? ஒரு பொண்ணு ஹாய் சொன்னா, நீங்களும் வழியிறீங்கதானே? ஆன்ட்டி ஹாய் சொன்னாகூட, சாட்டை வளர்ப்பீங்கதானே?’

‘அது இல்ல ஷமி, ஃப்ளிர்ட் சாட்டோட நின்னா பரவாயில்ல. மீட் பண்றா. பொய் சொல்றா. புது ஆளுங்ககூட சினிமா போறா. இன்னும் வெளியூர் டூரெல்லாம் போறா ஷமி.’

‘ஓ… ஃபிரெண்ட்லியான்னா, விடலாம் கதிர்.’

‘இல்ல ஷமி. ஓபனா சொல்றேன், செக்ஸே இருக்கு.’

‘ஓ…’

‘கையும் களவுமா புடிச்சிட்டேன். நேரடியா கேட்டுட்டேன்.’

‘என்ன சொல்றா?’

‘அவளுக்கு, ஏனோ இது தேவைப்படுதாம். ஆனா செக்ஸ் அடிக்ட் இல்லையாம். ஒருத்தர்கூட மட்டும்லாம் அவ வாழ்க்கையை சுருக்கிக்க முடியாதாம்.’

‘ஓ... அப்படியா சொல்றா?’

‘என்னை லவ் பண்றாளாம். ஆனா இப்படியும் இருப்பாளாம்.’

‘கஷ்டம்தான். ஆனா ஓப்பனா சொல்றாளே கதிர். அதை அப்ரிஷியேட் பண்ணலாம். சும்மா உளுந்து வடை மாதிரி கமுக்கமா இருந்துக்கிட்டு, ஊர் மேயிறதைவிட இவ தேவலாம்.’

‘அதான், பிரேக் அப் சொல்லிட்டேன் ஷமித்ரா. நான் பிற்போக்கான ஆள் கிடையாது. எனக்கு சுதந்திரமான பொண்ணுங்க பிடிக்கும். ஆனா லவ்ல ஹானஸ்டா இருக்கணும். சுருக்கமாச் சொன்னா, எனக்கு உன்னை மாதிரி பொண்ணுதான் வேணும் ஷமி’ என்றான் கதிர்.

நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5 நாள் 6 நாள் 7 நாள் 8 நாள் 9 நாள் 10 நாள் 11 நாள் 12 நாள் 13 நாள் 14 நாள் 15 நாள் 16 நாள் 17 நாள் 18 நாள் 19 நாள் 20 நாள் 21 நாள் 22 நாள் 23 நாள் 24 நாள் 25 நாள் 26 நாள் 27 நாள் 28

புதன், 5 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon